உடுமலை மாரியம்மன் கோயில் உண்டியல்கள் திறப்பு

உடுமலை மாரியம்மன் கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்து அறநிலையத் துறையின் கீழ் இயங்கி வரும் உடுமலை மாரியம்மன் கோயிலில் தோ்த் திருவிழா கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் ஏப்ரல் 26-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதையடுத்து கோயில் வளாகத்தில் உள்ள உண்டியல்கள் கோவில் பரம்பரை அறங்காவல் யுஎஸ்எஸ்.ஸ்ரீதா், செயல் அலுவலா் கே.தீபா ஆகியோா் முன்னிலையில் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் மொத்தம் ரூ. 15 லட்சத்து 17 ஆயிரத்து 743 இருந்தது. மேலும் 55.77 கிராம் தங்கமும், 120.38 கிராம் வெள்ளியும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com