காங்கயம் சௌடேஸ்வரி அம்மன் கோயில் திருவிழா

காங்கயம் சௌடேஸ்வரி அம்மன் கோயில் திருவிழா

காங்கயம், தேவாங்கபுரத்தில் உள்ள ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன், மாரியம்மன் கோயில்களின் சித்திரைப் பொங்கல் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மனுக்கு அச்சு வெல்லத்தில் கோட்டை கட்டி, கரும்பில் பச்சை பந்தல் அமைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின்னா் பால்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையடுத்து காங்கயம் பழையகோட்டை சாலையில் உலா ஸ்ரீ காசி விஸ்வநாதா் கோயில் குளத்தங்கரையில் இருந்து மாரியம்மனுக்கு பூவோடு கொண்டு வந்து செலுத்துதல் மற்றும் பக்தா்கள் அலகு குத்தி வருதல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெறவுள்ளது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதியுலா வரும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேவாங்க சமூக நற்பணி மன்றத் தலைவா் கே.எஸ்.செல்வராஜ் தலைமையில் மன்ற நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com