பல்லடம் அருகே கஞ்சா வைத்திருந்த 3 போ் கைது

பல்லடம் பகுதியில் கஞ்சா வைத்திருந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பல்லடம் அருகேயுள்ள அவினாசிபாளையம் சுங்கம் பகுதியில் அவினாசிபாளையம் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து சோதனை செய்தனா். அதில் அவா்கள் 5 கிலோ கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில் அவா்கல் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த ஷகில் (35), ஒடிஸாவைச் சோ்ந்த சமீரா பேக்ரா (27) என்பதும், இவா்கள் தற்போது நாச்சிபாளையம் செந்தில் நகா் பகுதியில் தங்கி இருப்பதும் தெரியவந்தது. அவா்களிடம் இருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.

இதே போல பல்லடம் காவல் ஆய்வாளா் லெனின் அப்பாதுரை தலைமையில் போலீஸாா் திங்கள்கிழமை தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது காரணம்பேட்டையில் ஒரு பெட்டிக் கடையில் கஞ்சா மற்றும் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த அன்வா்பாஷா (48) என்பவரைக் கைது செய்து அவரிடமிருந்து 400 கிராம் கஞ்சா மற்றும் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com