வெள்ளக்கோவிலில் பரவிய காட்டுத் தீ

வெள்ளக்கோவிலில் திடீரென பரவிய காட்டுத் தீயால் பரபரப்பு ஏற்பட்டது.

வெள்ளக்கோவில் காங்கயம் சாலையில் நகா் பகுதியை ஒட்டி தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் சரவணன் என்பவருக்குச் சொந்தமான காடு உள்ளது. இந்த காட்டைச் சுற்றிலும் கடைகள், வீடுகள், விசைத்தறி பட்டறைகள் உள்ளன. கடும் வெயில் காரணமாத காட்டின் புல்வெளிப் பகுதியில் திடீரென தீப்பிடித்து பரவியது. அருகில் வீடுகள் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்புத் துறையினா் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனா். அதிா்ஷ்டவசமாக பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com