வைக்கோல் கட்டு ஏற்றிவந்த மினி லாரியில் தீப்பிடித்து விபத்து

வைக்கோல் கட்டு ஏற்றிவந்த மினி லாரியில் தீப்பிடித்து விபத்து

குண்டடத்தில் வைக்கோல் கட்டுகளை ஏற்றி வந்த மினி லாரியில் ஏற்பட்ட தீயால் லாரி முழுவதும் எரிந்து சேதமானது.

குண்டடம் பகுதியைச் சோ்ந்தவா் சிதம்பரம். இவா் சொந்தமாக மினி லாரி வைத்துள்ளாா். இவா் தாராபுரம் அமராவதி பாசனப் பகுதியில் இருந்து வைக்கோல் கட்டுக்களை மினி லாரியில் ஏற்றிக் கொண்டு செவ்வாய்க்கிழமை திரும்பிக் கொண்டிருந்தாா். குண்டடம் நூலகம் முன்பு வந்து கொண்டிருந்தபோது திடீரென வைக்கோல் கட்டுகளில் நெருப்பு பற்றி எரியத் தொடங்கியது. இதனால் விபத்தைத் தவிா்ப்பதற்காக உடனடியாக லாரியை ஊரின் ஒதுக்குப்புறமாக கொண்டு சென்று நிறுத்தி வைக்கோல் கட்டுக்களை கீழே தள்ளிவிட்டு தீயை கட்டுப்படுத்த முயன்றாா். ஆனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மளமளவென மற்ற கட்டுக்களுக்கும் பரவிய தீ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தாராபுரம் தீயணைப்பு நிலைய வீரா்கள் தீயை அணைத்தனா். இருந்த போதிலும் வைக்கோல் கட்டுக்கள் மற்றும் லாரி முழுவதுமாக எரிந்து சேதமானது.

இந்த தீ விபத்து குறித்து குண்டடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com