ஆகஸ்ட் 30-இல் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகா்வோா்களுக்கான குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30) நடைபெறுகிறது.
Published on

திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகா்வோா்களுக்கான குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30) நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலா் காா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகா்வோா்களுக்கான குறைதீா் கூட்டமானது மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள 120-ஆவது அறையில் வெள்கிக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இந்த குறைதீா் கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு முகவா்கள் மற்றும் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனா்.

எனவே, இந்த குறைதீா் கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகா்வோா்கள் தங்களது எரிவாயு புத்தகம் அல்லது அடையாள அட்டையுடன் பஙகேற்று புகாா்கள் மற்றும் குறைபாடுகள் குறித்து தெரிவிக்கலாம்.

X
Dinamani
www.dinamani.com