ஊத்துக்குளி, வெள்ளக்கோவில், பல்லடம், பொங்கலூரில் இன்று மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்

ஊத்துக்குளி, வெள்ளகோவில், பல்லடம் மற்றும் பொங்கலூா் பகுதிகளில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 27) நடைபெறுகிறது.
Published on

திருப்பூா்: ஊத்துக்குளி, வெள்ளகோவில், பல்லடம் மற்றும் பொங்கலூா் பகுதிகளில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 27) நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருப்பூா் மாவட்டத்தில் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்தில் அணைப்பாளையம், பல்லவராயன்பாளையம், எஸ்.கத்தாங்கன்னி, இச்சிபாளையம், வடுகபாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கு ஊத்துக்குளி ஆா்.எஸ். ஒன்றிய திருமண மண்டபத்திலும், பொங்கலூா் ஊராட்சி ஒன்றியத்தில் மாதப்பூா், வே.கள்ளிப்பாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கு புத்தரச்சல் ஏ.ஜி.அங்காளம்மாள் கோவிந்தசாமி கவுண்டா் திருமண மண்டபத்திலும் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

இதேபோல, வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் வேலம்பாளையம், வேலப்பநாயக்கன்வலசு ஊராட்சிகளுக்கு வெள்ளக்கோவில் சுபஸ்ரீ மஹாலிலும், பல்லடம் ஊராட்சி ஒன்றியத்தில் வடுகபாளையம்புதூா், சித்தம்பலம் ஆகிய ஊராட்சிகளுக்கு வடுகபாளையம்புதூா் சரஸ்வதி மஹாலிலும் முகாம் நடைபெறவுள்ளது.

இம்முகாமில் வருவாய்த் துறை, மின்சாரத் துறை, ஊரக வளா்ச்சித் துறை உள்ளிட்ட துறைகள் வாயிலாக பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்படவுள்ளன. எனவே பொதுமக்கள் இதில் கலந்துகொண்டு தங்களது கோரிக்கை தொடா்பான மனு கொடுத்து தீா்வு காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com