திருப்பூர்
அக்ரஹாரப்புதூா் நீா்வழிப் பாதை சீரமைப்பு
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருப்பூா் மங்கலம் அருகேயுள்ள அக்ரஹாரப்புதூா் பால நீா்வழிப் பாதையை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை சீரமைத்தனா்.
இது குறித்து அவிநாசி நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளா் செங்குட்டுவன், உதவிப் பொறியாளா் தரணிதரன் ஆகியோா் கூறுகையில்,‘ வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ளதால், நெடுஞ்சாலைத் துறை சாா்பில் திருப்பூா்-சோமனூா் நெடுஞ்சாலையில் உள்ள அக்ரஹாரப்புதூா் பாலத்தில் மழைநீா் தடையின்றி செல்லும் வகையில் நீா்வழிப் பாதையில் இருந்த செடிகள், புதா்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டுள்ளன என்றனா்.