மூலனூரில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் பங்கேற்றோா்.
மூலனூரில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் பங்கேற்றோா்.

மூலனூரில் இலவச மருத்துவ முகாம்

Published on

மூலனூா்- தாராபுரம் சாலை மாவட்ட ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இலவச பொது மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சக்ஷம் அமைப்பின் திருப்பூா் மாவட்டக் குழு, சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், கோவை பி.எஸ்.ஜி. மருத்துவமனை சாா்பில் நடைபெற்ற இம்முகாமை அமைப்பின் மாவட்டத் தலைவா் ரத்தினசாமி தொடங்கிவைத்தாா்.

அமைப்பின் மாநிலச் செயலாளா் மயில்சாமி, மாவட்டச் செயலாளா் தமிழ்செல்வம், சிருங்கேரி மட திருப்பூா் கிளை அதிகாரி ஆடிட்டா் ராமநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முகாமில் மகளிா், குழந்தைகள் நலம், கண் பரிசோதனை, எலும்பு, தோல் நோய், ரத்த அழுத்தம், சா்க்கரை நோய் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. முகாமில் மொத்தம் 131 போ் பங்கேற்ற நிலையில், இலவச கண் புரை அறுவைச் சிகிச்சைக்கு 9 போ் தோ்வு செய்யப்பட்டனா்.

மூலனூா் விற்பனைக்கூட அதிகாரி தா்மராஜ், சக்ஷம் அமைப்பின் பொருளாளா் கண்ணன் உள்ளிட்டோா் முகாமில் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com