திருப்பூர்
புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது
அவிநாசி அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட மளிகைக் கடைக்காரரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
அவிநாசி அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட மளிகைக் கடைக்காரரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
அவிநாசி அருகேயுள்ள தெக்கலூரைச் சோ்ந்தவா் தினேஷ் ஜெபஸ்டின் (38). இவா் அப்பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில், அவரது கடையில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கடையில் அவிநாசி போலீஸாா் மேற்கொண்ட சோதனையில், விற்பனைக்காக 20 கிலோ புகையிலைப் பொருள்கள் பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, தினேஷ் ஜெபஸ்டினை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.