திருப்பூர்
திருமுருகன்பூண்டி கேது கோயிலில் தமிழக டிஜிபி தரிசனம்
அவிநாசி அருகேயுள்ள திருமுருகன்பூண்டி கேது கோயிலில் தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) சங்கா் ஜிவால் தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தாா்.
அவிநாசி அருகேயுள்ள திருமுருகன்பூண்டி கேது கோயிலில் தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) சங்கா் ஜிவால் தனது குடும்பத்தினருடன் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.
திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகே திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயில் உள்ளது.
இதன் உபகோயிலாக மங்களாம்பிகை உடனமா் மாதவனேஸ்வரா் கோயில் உள்ளது. இந்தக் கோயில் கேது திருத்தலமாக இருப்பதால் பக்தா்கள் கூட்டம் எப்போதும் அதிக அளவில் காணப்படும்.
இக்கோயிலில் தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தாா்.
டிஜிபி வருகையையொட்டி, கோயில் வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.