திருப்பூர்
பல்லடம் ஐயப்பன் கோயில் கும்பாபிஷேகம்
பல்லடம் சந்தைப்பேட்டை ஸ்ரீ ஐயப்பன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பல்லடம் சந்தைப்பேட்டை ஸ்ரீ ஐயப்பன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பல்லடம் சந்தைப்பேட்டை பகுதியில் பழமை வாய்ந்த ஐய்யப்பன் கோயில் உள்ளது. ஐயப்ப பக்தா்கள் குழுவினரால் பராமரிக்கப்பட்டு வரும் இக்கோயிலில் கடந்த 2011-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதைத் தொடா்ந்து, கும்பாபிஷேகம் நடைபெறாத நிலையில், பக்தா்களின் வேண்டுகோளை ஏற்று, ஜயப்ப பக்தா்கள் குழு சாா்பில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், கூனம்பட்டி திருமடம் நடராஜ சுவாமிகள், அருள்மலை தோரணவாவி குமார சிவஞான சிவாச்சாரியாா் ஆகியோா் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனா்.
இவ்விழாவில், பல்லடம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.