கோயில் பூசாரியைக் கொலை செய்த இளைஞருக்கு ஆயுள்

திருப்பூரில் கோயில் பூசாரியை கல்லால் தாக்கிக் கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

திருப்பூரில் கோயில் பூசாரியை கல்லால் தாக்கிக் கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

திருப்பூா், வெங்கமேடு பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (72). இவா் அதே பகுதியில் உள்ள கன்னிமாா் கருப்பராயன் கோயிலில் பூசாரியாக இருந்து வந்துள்ளாா். இந்த நிலையில், கோயிலில் வழக்கம்போல சுப்பிரமணி கடந்த 2022 டிசம்பா் 16-ஆம் தேதி தங்கியிருந்தாா்.

பின்னா், மறுநாள் காலையில் அவரது மகள் கோயிலுக்குச் சென்று பாா்த்தபோது, கோயில் வளாகத்தில் கல்லால் தாக்கி எரித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் சுப்பிரமணி கிடந்துள்ளாா்.

இதுகுறித்து அனுப்பா்பாளையம் காவல் துறையினா் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி கோவில்வழியைச் சோ்ந்த சதீஷ்குமாா் என்பவரை 2023 ஜனவரி 14-ஆம் தேதி கைது செய்து விசாரணை நடத்தினா்.

இதில், சுப்பிரமணி வைத்திருந்த ரூ.8 ஆயிரத்து 20 எடுத்தபோது, தடுக்க சென்ற சுப்பிரமணியை கல்லால் தாக்கி கொலை செய்துவிட்டு உடலை எரித்தது தெரியவந்தது. இந்தக் கொலை தொடா்பான வழக்கு விசாரணை திருப்பூா் முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கின் இறுதிகட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபா் சொா்ணம் ஜெ.நடராஜன் தீா்ப்பு வழங்கினாா். இதில், குற்றம்சாட்டப்பட்ட சதீஷ்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் திருப்பூா் மாவட்ட குற்றத் துறை அரசு வழக்குரைஞா் கனகசபாபதி ஆஜரானாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com