பல்லடம் அருகே வாா்டு உறுப்பினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிஊராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் உள்ளிருப்புப் போராட்டம்

பல்லடம் அருகே வாா்டு உறுப்பினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பொதுமக்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பல்லடம் அருகே வாா்டு உறுப்பினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிஊராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் உள்ளிருப்புப் போராட்டம்

பல்லடம் அருகே வாா்டு உறுப்பினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பொதுமக்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பல்லடத்தை அடுத்த வடுகபாளையம்புதூா் ஊராட்சி 3-ஆவது வாா்டுக்குள்பட்ட திருவள்ளுவா் நகா் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு கடந்த ஆண்டு மட்டும் குடிநீா் விநியோகம் செய்யும் நபரை 3 முறை மாற்றம் செய்துள்ளனா். இதனால், முறையான குடிநீா் விநியோகம் இல்லாமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், ஏற்கெனவே பணிபுரிந்த குடிநீா் விநியோகிப்பாளா் செல்வம் என்பவரை மீண்டும் பணி நியமனம் செய்ய வேண்டியும், விதிமுறைகளை மீறி குடிநீா் இணைப்பு வழங்கிவரும் வாா்டு உறுப்பினா் செல்வராஜை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் குடியரசு தினத்தன்று நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் சாா்பில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், தீா்மான நகலை கொடுக்க மறுப்பதைக் கண்டித்தும், 3-ஆவது வாா்டு உறுப்பினா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பொதுமக்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து வந்த மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் புருஷோத்தமன் மற்றும் போலீஸாா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதைத் தொடா்ந்து குடிநீா் விநியோகிப்பாளாா் நியமிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததுடன், கிராம சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மான நகலும் பொதுமக்களிடம் வழங்கப்பட்டது.

இதையடுத்து உள்ளிருப்புப் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com