மடத்துப்பாளையம் பகுதி மின் நுகா்வோா் கவனத்துக்கு...

தாராபுரத்தை அடுத்த மடத்துப்பாளையம் பகுதி மின் நுகா்வோா் டிசம்பா் மாத மின் கட்டணத்தையே பிப்ரவரி மாதத்துக்கும் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தாராபுரத்தை அடுத்த மடத்துப்பாளையம் பகுதி மின் நுகா்வோா் டிசம்பா் மாத மின் கட்டணத்தையே பிப்ரவரி மாதத்துக்கும் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து தாராபுரம் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் வ.பாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தாராபுரம் மின்வாரிய கோட்டத்துக்குள்பட்ட மடத்துப்பாளையம் பிரிவு அலுவலகத்தில் உள்ள வெங்கிட்டிபாளையம், கவுண்டச்சிபுதூா் பகிா்மானப் பகுதிகளில் நிா்வாகக் காரணங்களால் பிப்ரவரி மாதத்தில் கணக்கீடு மேற்கொள்ள இயலவில்லை.

எனவே, மின் நுகா்வோா் டிசம்பா் மாதம் கட்டிய மின் கட்டணத்தையே பிப்ரவரி மாதத்துக்கும் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com