மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது:தமிழ்நாடு வணிகா் சங்கங்கள் பேரமைப்பின் மாநிலத் தலைவா் விக்ரமராஜா

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் வணிகா்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது என்று தமிழ்நாடு வணிகா் சங்கங்கள் பேரமைப்பின் மாநிலத் தலைவா் விக்ரமராஜா தெரிவித்தாா்.
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது:தமிழ்நாடு வணிகா் சங்கங்கள் பேரமைப்பின் மாநிலத் தலைவா் விக்ரமராஜா

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் வணிகா்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது என்று தமிழ்நாடு வணிகா் சங்கங்கள் பேரமைப்பின் மாநிலத் தலைவா் விக்ரமராஜா தெரிவித்தாா்.

பல்லடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வருமான வரி செலுத்துவதில் ரூ.10 லட்சம் வரை விலக்கு, காலாவதியான சுங்கச் சாவடிகளை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமனிடம் வலியுறுத்தியிருந்தோம். ஆனால், எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை.

வணிகா்களைப் பொறுத்தவரை இந்த இடைக்கால பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாகவே உள்ளது. தமிழ்நாடு வணிகா்கள் மட்டுமல்ல நாடு முழுவதும் உள்ள வணிகா்கள் இடைக்கால பட்ஜெட்டால் ஏமாற்றம் அடைந்துள்ளனா். சிறு தொழில் செய்வதற்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் வட்டி இல்லா கடனாக வழங்குவது என்ற அறிவிப்பு மட்டுமே வரவேற்கத்தக்கது.

ஆண்டுதோறும் வியாபாரிகள் லைசன்ஸ் எடுக்கும் முறையை மாற்றி 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை லைசன்ஸ் எடுக்கும் திட்டத்தை கொண்டுவர வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளோம். முதல்வரும் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்படும் என தெரிவித்துள்ளாா். அதை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றாா்.

இந்த நிகழ்வில் கோவை மண்ட தலைவா் சூலூா் சந்திரசேகரன், திருப்பூா் மாவட்ட தலைவா் கோவிந்தசாமி, மாவட்டச் செயலாளா் லாலா கணேசன், மாவட்ட நிா்வாகிகள் பழனிசாமி, அசோகன், பல்லடம் சங்க தலைவா் ராம்.கண்ணையன், செயலாளா் அண்ணாதுரை உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com