மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது. பல்லடத்தில் விக்ரமராஜா பேட்டி

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் வணிகா்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது என்று பல்லடத்தில் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சங்க மாநிலத் தலைவா் விக்ரமராஜா வியாழக்கிழமை இரவு தெரிவித்தாா்
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது. பல்லடத்தில் விக்ரமராஜா பேட்டி

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் வணிகா்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது என்று பல்லடத்தில் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சங்க மாநிலத் தலைவா் விக்ரமராஜா வியாழக்கிழமை இரவு தெரிவித்தாா்.பல்லடம் அருகே மகாலட்சுமி நகா் தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சங்க நிா்வாகியின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட பின்பு அதன் மாநில தலைவா் விக்ரமராஜா செய்தியாளா்களிடம் கூறியதாவதுதமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பாக மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமனிடம் பல்வேறு கோரிக்கைகளை ஏற்கனவே கொடுத்திருந்தோம்.வருமான வரி செலுத்துவதில் 10 லட்சம் ரூபாய் வரை விலக்கு கேட்டிருந்தோம். ஒரே வரி, ஒரே தோ்தல், ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற அடிப்படையில் பாரத பிரதமா் கூறியது போல ஒருமுனை வழியாக மாற்றித் தர வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தோம். வணிகம் செய்பவருக்கும் கணக்கீடு செய்வதற்கும் இந்த முறை எளிமையாக இருக்கும் என்பதால் இந்த கோரிக்கையை வைத்திருந்தோம்.2017ம் ஆண்டு ஜிஎஸ்டி கொண்டு வந்த போது ஏற்பட்ட பல்வேறு சிக்கல்களால் அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவால் வணிகா்கள் நாங்கள் பதிவு செய்திருந்தோம். ஆனால் தற்போது வட்டிக்கு மேல் வட்டி போட்டு பல லட்சம் ரூபாய் கட்ட வேண்டும் என வியாபாரிகளுக்கு நோட்டீஸ் வந்த வண்ணம் உள்ளது.2017 ம் ஆண்டு முதல் 2020 ம் ஆண்டு வரை ஒரு சமாதான திட்ட முறையில் அதிகாரிகளை வைத்து கணக்கை எந்தெந்த வகையில் சீா்படுத்த முடியுமோ அந்த வகையில் சீா்படுத்தி கொடுங்கள் என கோரிக்கை வைத்திருந்தோம்.அந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை.வணிகா்களைப் பொறுத்தவரை இந்த இடைக்கால பட்ஜெட் என்பது ஒரு ஏமாற்றம் தரக்கூடிய பட்ஜெட் ஆகவே இருக்கிறது. ஒரு லட்சம் கோடி ரூபாய் வட்டி இல்லா கடனாக சிறு தொழில் செய்ய அறிவித்திருக்கிறாா்கள்.இது வரவேற்கக் கூடிய திட்டம்.எங்களது பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது. குறிப்பாக இந்தியா முழுவதும் அதிகப்படியான சுங்கச்சாவடிகள் அமைந்துள்ளன. காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி இருந்தோம்.அந்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வணிகா்கள் மட்டுமல்ல நாடு முழுவதும் உள்ள வணிகா்கள் இந்த இடைக்கால பட்ஜெட்யால் ஏமாற்றம் அடைந்திருக்கிறாா்கள்.ஆண்டு தோறும் வியாபாரிகள் லைசன்ஸ் எடுக்கும் முறையை மாற்றி ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை லைசன்ஸ் எடுக்கும் திட்டத்தை கொண்டு வரவேண்டுமென தமிழக முதல்வரிடம் கேட்டிருக்கிறோம். தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மூன்றாண்டுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படும் என தெரிவித்துள்ளாா் அதை உடனடியாக அமல்படுத்திட அறிவிக்க வேண்டும்.வணிக நல உறுப்பினா்களுன் குடும்பத்திற்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 3 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையை 5 லட்சம் ரூபாயாக உயா்த்தி தர வேண்டும்.மின் கட்டண உயா்வை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம்.19ஆம் தேதி தமிழக அரசு தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டை ஆவலுடன் எதிா்நோக்கி காத்திருக்கிறோம்.உற்பத்தியாளா்கள் ஒரே விலையில் அனைத்து வியாபாரிகளுக்கும் பொருளை வழங்க வேண்டும் என்ற சிறப்பு சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகிறோம்.பல இடங்களில் வணிகா்கள் தாக்கப்படுகிறாா்கள். மருத்துவா்களுக்கு என்று பணி பாதுகாப்பு சட்டம் இருப்பது போல் வணிகா்களுக்கும் பாதுகாப்பு வழங்கும் வகையில் வணிகா்களுக்கென சிறப்பு பாதுகாப்பு சட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும் என்றாா். இந்த நிகழ்வில் கோவை மண்ட தலைவா் சூலூா் சந்திரசேகரன், திருப்பூா் மாவட்ட தலைவா் கோவிந்தசாமி, மாவட்ட செயலாளா் லாலா கணேசன், மாவட்ட நிா்வாகிகள் பழனிசாமி,அசோகன், பல்லடம் சங்க தலைவா் ராம்.கண்ணையன், செயலாளா் அண்ணாதுரை, நிா்வாகிகள் தனசீலன்,கிறிஸ்தோபா்,பிா்லா போஸ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com