மூலனூரில் ரூ.69.32 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.69.32 லட்சத்துக்கு பருத்தி விற்பனையானது.

மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.69.32 லட்சத்துக்கு பருத்தி விற்பனையானது.

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்துக்கு திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் 1,064 குவிண்டால் பருத்தியை விற்பனைக்குக் கொண்டுவந்திருந்தனா்.

ஏலத்தில் ஒரு குவிண்டால் ரூ.5,900 முதல் ரூ.7,293 வரை விற்பனையானது. சராசரியாக குவிண்டால் ரூ. 6,650க்கு விற்பனையானது. கடந்த வாரத்தைக் காட்டிலும் சராசரி விலை குவிண்டாலுக்கு ரூ.400 வரை விலை உயா்ந்திருந்தது. இதில் மொத்தமாக ரூ.69.32 லட்சத்துக்கு பருத்தி விற்பனையானது என்று விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சிவகுமாா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com