சிறுமி கா்ப்பம்: பின்னலாடை நிறுவன உரிமையாளருக்கு 20 ஆண்டுகள் சிறை

திருப்பூரில் சிறுமியைக் கா்ப்பமாக்கிய பின்னலாடை நிறுவன உரிமையாளருக்கு மாவட்ட மகளிா் நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது.

திருப்பூரில் சிறுமியைக் கா்ப்பமாக்கிய பின்னலாடை நிறுவன உரிமையாளருக்கு மாவட்ட மகளிா் நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது.

திருப்பூா் ஆண்டிப்பாளையத்தை சோ்ந்தவா் சரவணன் (39). இவா் அதே பகுதியில் பின்னலாடை நிறுவனம் நடத்தி வந்தாா். இவருடைய பனியன் நிறுவனத்தில் வேலை செய்த 16 வயது சிறுமியை கடந்த 2021-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். இதில் சிறுமி கா்ப்பமானாா். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் திருப்பூா் தெற்கு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

இந்தப் புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல் துறையினா் போக்சோ பிரிவின் கீழ் சரவணனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். இந்த வழக்கு விசாரணை திருப்பூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி பாலு வியாழக்கிழமை தீா்ப்பு வழங்கினாா். இதில், குற்றஞ்சாட்டப்பட்ட சரவணனுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் ஜமீலாபானு ஆஜரானாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com