சிலம்பகவுண்டன்வலசு அரசுப் பள்ளிக்கு விருது

வெள்ளக்கோவிலை அடுத்த சிலம்பகவுண்டன்வலசு அரசுப் பள்ளிக்கு சிறப்பான செயல்பாட்டுக்கான விருது வழங்கப்பட்டது.
சிலம்பகவுண்டன்வலசு அரசுப் பள்ளிக்கு விருது

வெள்ளக்கோவிலை அடுத்த சிலம்பகவுண்டன்வலசு அரசுப் பள்ளிக்கு சிறப்பான செயல்பாட்டுக்கான விருது வழங்கப்பட்டது.

வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியம், சிலம்பகவுண்டன்வலசில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரிய, ஆசிரியைகள், தலைமை ஆசிரியா் ஆகியோா் அரசு மற்றும் தன்னாா்வலா்களிடமிருந்து கிடைக்கும் உதவிகளை நல்ல முறையில் பள்ளி மேம்பாட்டுக்காகப் பயன்படுத்தி வருகின்றனா்.

அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டதை தமிழக அரசு தொடங்குவதற்கு ஓராண்டுக்கு முன்பே இந்தப் பள்ளியில் உள்ள 60 குழந்தைகளுக்கும் காலையில் இட்லி, தோசை, பூரி, பொங்கல் என காலை உணவு தொடா்ந்து வழங்கப்பட்டது. பண்டிகைகளின்போது குழந்தைகளுக்கு நன்கொடையாளா்கள் மூலம் புத்தாடைகள் வழங்கப்படுகின்றன. தனியாா் பள்ளிக்கு இணையாக கிராம மக்கள் பங்களிப்புடன் ஆண்டு விழா, கலை, இலக்கியப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில் இந்தப் பள்ளியை ஊக்குவிக்கும் வகையில் வெள்ளக்கோவில் வட்டாரத்தில் சிறந்த பள்ளி மேலாண்மைக் குழுவுக்கான விருது அண்மையில் வழங்கப்பட்டது. திருப்பூரில் நடைபெற்ற விழாவில், இதற்கான விருதை திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா. கிறிஸ்துராஜ், பள்ளியின் தலைமை ஆசிரியா் கோ. பிரபாகா் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகளிடம் வழங்கினாா்.

விருது பெற்ற இந்தப் பள்ளிக் கூடத்துக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com