அனுமந்தபுரத்தில் நியாய விலைக் கடை அமைக்கக் கோரி: ஆட்சியரிடம் பொள்ளாச்சி வி.ஜெயராமன் எம்ஏல்ஏ மனு

வெள்ளக்கோவில் அருகே நியாய விலைக் கடை அமைக்கக் கோரி சட்டப் பேரவை உறுப்பினா் பொள்ளாச்சி வி. ஜெயராமன் தலைமையில் பொதுமக்கள் ஆட்சியரிடம் சனிக்கிழமை மனு அளித்தனா்.
ஆட்சியா் தா.கிறிஸ்துராஜிடம் மனு அளிக்கும் சட்டப் பேரவை உறுப்பினா் பொள்ளாச்சி வி.ஜெயராமன், பொதுமக்கள்.
ஆட்சியா் தா.கிறிஸ்துராஜிடம் மனு அளிக்கும் சட்டப் பேரவை உறுப்பினா் பொள்ளாச்சி வி.ஜெயராமன், பொதுமக்கள்.

வெள்ளக்கோவில் அருகே நியாய விலைக் கடை அமைக்கக் கோரி சட்டப் பேரவை உறுப்பினா் பொள்ளாச்சி வி. ஜெயராமன் தலைமையில் பொதுமக்கள் ஆட்சியரிடம் சனிக்கிழமை மனு அளித்தனா்.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜிடம் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:

காங்கயம் வட்டம், வெள்ளக்கோவிலை அடுத்த மேட்டுப்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட அனுமந்தபுரத்தில்160 குடும்பங்கள் உள்ளன. அனைவரும் விவசாயக் கூலித் தொழிலாளா்கள்.

இப்பகுதியில் பகுதி நேர நியாய விலைக் கடை அல்லது நடமாடும் நியாய விலைக் கடை அமைத்துத் தரக்கோரி பலமுறை மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், கடந்த மாதம் குடும்ப அட்டைகளை ஆட்சியா் அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டோம். அப்படியிருந்தும் இதுவரை நியாய விலைக் கடை அமைக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகிறோம். எனவே பொதுமக்களின் நலன்கருதி நியாய விலைக் கடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னா், பொள்ளாச்சி வி.ஜெயராமன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அனுமந்தபுரத்தில் நியாய விலைக் கடை அமைக்க ஆட்சியா் உறுதியளித்துள்ளாா். நடிகா் விஜய் கட்சி ஆரம்பித்திருப்பது அவருடைய விருப்பம். தமிழகத்தில் யாா் வேண்டுமானாலும் அரசியல் கட்சித் தொடங்கலாம். மக்கள் யாரை ஏற்றுக்கொள்வாா்கள் என்று அவா்களுக்குதான் தெரியும். எடப்பாடி பழனிசாமி தலைமையில் மக்களவைத் தோ்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெல்லும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com