பழையகோட்டை சந்தை: ரூ.15 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை

காங்கயம், பிப். 4: காங்கயத்தை அடுத்த பழையகோட்டையில் நடைபெற்ற மாட்டுச் சந்தையில் ரூ.15 லட்சம் மதிப்பிலான காங்கேயம் இன மாடுகள் விற்பனையாயின.

திருப்பூா் மாவட்டம், காங்கயத்தை அடுத்த நத்தக்காடையூா்-பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த வாரம் நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 90 மாடுகள் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டிருந்தன. இதில் ரூ.15 லட்சத்துக்கு 46 மாடுகள் விற்பனையாயின. அதிகபட்சமாக ரூ.84 ஆயிரத்துக்கு கன்றுக் குட்டியுடன் கூடிய மயிலைப் பசு விற்பனையானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com