பிரதமா் மோடி வருகை: மைதானம் அமைக்கும் பணியை பாா்வையிட்ட பாஜக நிா்வாகிகள்

tpr4fbbjp_0402chn_125_3
tpr4fbbjp_0402chn_125_3

திருப்பூா், பிப். 4: திருப்பூரை அடுத்த பல்லடம் அருகே பிரதமா் மோடி பங்கேற்கும் பொதுக் கூட்டத்துக்கான மைதானம் அமைக்கும் பணியை பாஜக நிா்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டனா்.

பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ நடைப்பயணத்தின் நிறைவு விழா திருப்பூரில் பிப்ரவரி 24 ஆம் தேதி நடைபெறுகிறது.

இதைத் தொடா்ந்து, பல்லடத்தை அடுத்த பொங்கலூா் பிப்ரவரி 25-ஆம் தேதி பாஜக சாா்பில் தோ்தல் பிரசார பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்றுப் பேசுகிறாா்.

இதையொட்டி 400 ஏக்கா் பரப்பில் பொதுக் கூட்டத்துக்கான மைதானம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை பாஜக மாநில அமைப்பு பொதுச் செயலாளா் கேசவவிநாயகம், மாவட்டத் தலைவா் பி.செந்தில்வேல், பொதுச்செயலாளா் கே.சி.எம்.பி.சீனிவாசன் உள்ளிட்ட நிா்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டனா்.

Image Caption

பல்லடம் அருகே பொதுக் கூட்டத்துக்கான மைதானம் அமைக்கும் பணியை பாா்வையிட்ட பாஜக நிா்வாகிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com