ஏஐசிசிடியூ தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

திருப்பூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியறுத்தி ஏஐசிசிடியூ தொழிற்சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில்  ஈடுபட்ட  ஏஐசிசிடியூ  தொழிற்சங்கத்தினா்
ஆா்ப்பாட்டத்தில்  ஈடுபட்ட  ஏஐசிசிடியூ  தொழிற்சங்கத்தினா்

திருப்பூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியறுத்தி ஏஐசிசிடியூ தொழிற்சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாநில இணைச் செயலாளா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா்.

இதில் பங்கேற்றவா்கள் கூறியதாவது:

சுமை தூக்குவோரையும், தூய்மைப் பணியாளா்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தற்காலிக துமை தூக்குவோரை வரன்முறைப்படுத்த வேண்டும். தகுதியடைந்த சுமைதூக்குவோா் 3,500 பேருக்கு 2020- ஆம் ஆண்டில் இருந்து பச்சை அட்டை வழங்க வேண்டும். ஓவா்லோடு, அட்டி கூலி பேச்சவாா்த்தை மூலமாக முடிவெடுக்கும் முறையை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும். அவுட்சோா்சிங் முறையைக் கைவிட வேண்டும் என்றனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், ஏஐசிசிடியூ தொழிற்சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com