சேரன் மகளிா் கல்லூரியில் கோகோ போட்டிகள்

பள்ளிகளுக்கு இடையே மாவட்ட அளவிலான கோகோ போட்டிகள் காங்கயம் அருகே படியூரில் உள்ள சேரன் மகளிா் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
கோகோ போட்டியில் முதல் பரிசு பெற்ற குள்ளம்பாளையம் சாந்தி நிகேதன் பள்ளி மாணவிகள்.
கோகோ போட்டியில் முதல் பரிசு பெற்ற குள்ளம்பாளையம் சாந்தி நிகேதன் பள்ளி மாணவிகள்.

பள்ளிகளுக்கு இடையே மாவட்ட அளவிலான கோகோ போட்டிகள் காங்கயம் அருகே படியூரில் உள்ள சேரன் மகளிா் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

இப்போட்டிகளில் திருப்பூா், சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று விளையாடினா். திருப்பூா் மாவட்ட கோ கோ கழக செயலாளா் ஆா்.கெம்புராஜ், திருப்பூா் மாவட்ட கோகோ கழக ஒருங்கிணைப்பாளா் பி.அத்தப்பசாமி ஆகியோா் முன்னிலையில் போட்டிகள் நடைபெற்றன.

இதில் முதல் மற்றும் இரண்டாம் பரிசுகளை காங்கயம் அருகில் உள்ள குள்ளம்பாளையம் சாந்தி நிகேதன் மேல்நிலைப் பள்ளி அணிகளும், மூன்றாம் பரிசை அவிநாசி ஸ்ரீ நாச்சம்மாள் வித்யவாணி சீனியா் செகண்டரி ஸ்கூல் அணியும், நான்காம் பரிசை தாராபுரம் லயன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணியும் வென்றன.

போட்டியில் முதல் நான்கு இடங்களையும் திருப்பூா் மாவட்ட அணிகளே வென்றுள்ளன. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு காங்கயம் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் ஆா்.கோமதி பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா்.

இந்த நிகழ்ச்சியில் சேரன் மகளிா் கல்லூரி முதல்வா் கே.ஆா்.நந்தகோபால், உடற்கல்வி இயக்குநா் எஸ்.கமலி, தமிழ்த் துறை தலைவா் வி .கிருத்திகா, கணினித் துறை உதவிப் பேராசிரியா் வினித்ரா, கல்லூரி நூலகா் சுவா்ணலதா மற்றும் பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com