தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

வெள்ளக்கோவில் அருகே பெட்டிக் கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

வெள்ளக்கோவில் அருகே பெட்டிக் கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

வெள்ளக்கோவில் பகுதியில் சில கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் செல்வராஜ் தாராபுரம் சாலையிலுள்ள தாசவநாயக்கன்பட்டி, நாகமநாயக்கன்பட்டி பகுதியில் சந்தேகத்துக்கு உரிய கடைகளில் சோதனை மேற்கொண்டாா்.

இதில், நாகமநாயக்கன்பட்டி வெங்கமேடு பழனிசாமி (78) பெட்டிக் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 9 கிலோ கொண்ட 160 பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து அவா் கைது செய்யப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com