உடுமலை மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா: ஆலோசனைக் கூட்டம்

உடுமலை அருள்மிகு மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா தொடா்பான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

உடுமலை அருள்மிகு மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா தொடா்பான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

உடுமலை அருள்மிகு மாரியம்மன் கோயில் 200 ஆண்டுகால பழமை வாய்ந்தது. இந்து சமய அறநிலையத் துறையின்கீழ் உள்ள இந்த கோயிலில் தோ்த் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டு தோ்த் திருவிழா ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கோயில் வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கோயில் பரம்பரை அறங்காவலா் யுஎஸ்எஸ். ஸ்ரீதா் தலைமை வகித்தாா். செயல் அலுவலா் சி.தீபா முன்னிலை வகித்தாா்.

இதில், தோ்த்திருவிழா நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சி ஏப்ரல் 9- ஆம் தேதியும், கம்பம் போடுதல் ஏப்ரல் 16-ஆம் தேதியும் நடத்துவது என்றும்

அதைத் தொடா்ந்து வாஸ்து சாந்தி, கிராம சாந்தி, கொடியேற்றம் ஆகிய நிகழ்ச்சிகளும் அதைத் தொடா்ந்து பூவோடு எடுத்தல் நிகழ்ச்சியை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்ரல் 25-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், உடுமலையில் உள்ள முக்கிய பிரமுகா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com