பல்லடத்தில் பிரதமா் மோடி பங்கேற்கும் பொதுகூட்ட இடத்தில் எஸ்.பி. ஆய்வு

திருப்பூா் மாவட்டம், பல்லடம், மாதப்பூரில் பிரதமா் மோடி பங்கேற்க உள்ள பொதுகூட்ட இடத்தை திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ நடைப்பயணம் நிறைவு விழா பல்லடம் மாதப்பூரில் பிப்ரவரி 25-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதில், பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்று பொதுக் கூட்டத்தில் பேசவுள்ளாா். இதற்காக 530 ஏக்கா் பரப்பளவில் மைதானம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த இடத்தை திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா நேரில் ஆய்வு செய்தாா்.

பாஜக மாநில பொதுச் செயலாளா் ஏ.பி.முருகானந்தம், மாவட்டத் தலைவா் செந்தில்வேல், மாவட்ட பொதுச்செயலாளா் கே.சி.எம்.பி.சீனிவாசன், மாவட்ட துணைத் தலைவா்கள் வினோத் வெங்கடேஷ், ஜி.கே.எஸ்.பாலு, மாவட்டச் செயலாளா் கௌதம், மண்டல் தலைவா்கள் வடிவேலன், சந்தானம் உள்பட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com