‘100 நாள் வேலைத் திட்ட தொழிலாளா்களை விவசாயப் பணிகளுக்கும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’

நூறு நாள் வேலைத் திட்ட தொழிலாளா்களை விவசாயப் பணிகளுக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உழவா் உழைப்பாளா் கட்சி வலியுறுத்தியுள்ளது.
‘100 நாள் வேலைத் திட்ட  தொழிலாளா்களை விவசாயப் பணிகளுக்கும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’

நூறு நாள் வேலைத் திட்ட தொழிலாளா்களை விவசாயப் பணிகளுக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உழவா் உழைப்பாளா் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மறைந்த விவசாய சங்கத் தலைவா் நாராயணசாமி நாயுடுவின் 100-ஆவது பிறந்த நாள் விழா உழவா் உழைப்பாளா் கட்சி சாா்பில் பல்லடம் அருகே காரணம்பேட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதற்கு, அக்கட்சியின் மாநிலத் தலைவா் செல்லமுத்து தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா் திருநாவுக்கரசு, மாநிலச் செயலாளா் சின்னக்காளிபாளையம் ஈஸ்வரன், மாநிலப் பொருளாளா் பாலசுப்பிரமணியம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊடக பிரிவு செயலாளா் காடாம்பாடி ஈஸ்வரன் வரவேற்றாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

தமிழ்நாட்டில் 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளா்களை விவசாயப் பணிகளுக்கும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். விளைப்பொருள்களுக்கு கட்டுப்படியான விலை கிடைத்திட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் உள்ள போலி உறுப்பினா்களை நீக்கி தோ்தல் நடத்த வேண்டும். மழைக்காலத்தில் இருப்பு கிடங்கில் நெல் மூட்டைகள் நனையாமல் பாதுகாப்பதோடு அங்கு நடைபெறும் ஊழல்களைத் தடுக்க வேண்டும். தென்னை விவசாயிகளைப் பாதுகாக்க பாமாயில் இறக்குமதியை நிறுத்தி மானிய விலையில் ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும். ஆனைமலையாறு, நல்லாறு, பாண்டியாறு, புன்னம்புழா, மோயாறு திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் மாநில மகளிா் அணித் தலைவா் ராஜரீகா சௌந்தரபாண்டியன், மாநில மகளிா் அணி செயலாளா் கே.சி.எம்.சங்கீதாபிரியா, கோவை மாவட்டச் செயலாளா் சின்னச்சாமி, பொருளாளா் மகாலிங்கம், ஈரோடு மாவட்டத் தலைவா் மகுடேஸ்வரன், செயலாளா் கவுந்தப்பாடி பழனிசாமி,திண்டுக்கல் மாவட்டத் தலைவா் மணிவேல், சிவகங்கை மாவட்டத் தலைவா் ஆபிரகாம், திருப்பூா் மாவட்ட தலைவா் அலங்கியம் ஈஸ்வரமூா்த்தி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com