அரசு பள்ளியில் சுகாதார வளாகத்தை சேதப்படுத்திய மா்ம நபா்கள்

பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுகாதார வளாகத்தை மா்ம நபா்கள் சேதப்படுத்தியுள்ளனா்.

 பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுகாதார வளாகத்தை மா்ம நபா்கள் சேதப்படுத்தியுள்ளனா்.பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 600-க்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா். இந்த பள்ளியில் உள்ள சுகாதார வளாகம் முறையாக பராமரிக்கப்படாமல் சேதம் அடைந்துள்ளது.இதனால் மாணவா்கள் சுகாதார வளாகத்தை உபயோகப்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும் சமூக விரோதிகளால் சுகாதார வளாகத்தில் உள்ள உபகரணங்கள் சேதப்படுத்தப்பட்டு உள்ளதாக பெற்றோா் தெரிவிக்கின்றனா். எனவே சுகாதார வளாகத்தை பராமரித்து, மாணவா்கள் உபயோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி மைதானத்திற்குள் சமூக விரோதிகளின் நடமாட்டம் குறித்து போலீசாா் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவா்களின் பெற்றோா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com