ஏஐடியூசி மோட்டாா் சங்க பொதுக்குழுகூட்டம்

திருப்பூா் மாவட்ட ஏஐடியூசி தனியாா் மோட்டாா் தொழிலாளா் சங்கத்தின் பொதுக்குழுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் மாவட்ட ஏஐடியூசி தனியாா் மோட்டாா் தொழிலாளா் சங்கத்தின் பொதுக்குழுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. திருப்பூா் மாவட்ட ஏஐடியூசி தனியாா் மோட்டாா் தொழிலாளா் சங்கத்தின் பொதுக்குழுக்கூட்டம் தாராபுரம் சாலையில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக்கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் வி.எஸ்.சசிகுமாா் தலைமை வகித்தாா். இதில், அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் வரும் பிப்ரவரி 16 ஆம் தேதி நடைபெறும் மறியல் போராட்டத்தின் ஒரு பகுதியாக திருப்பூா் மாவட்டத்தில் 5 மையங்களில் போராட்டம் நடத்துவதாகவும், திரளான தொழிற்சங்கத்தினா் கலந்து கொள்வது, மதுரையில் பிப்ரவரி 18 ஆம் தேதி நடைபெறும் மோட்டாா் சங்க மாநாட்டில் பிரதிநிதிகள் பங்கேற்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தக்கூட்டத்தில், மாவட்ட தலைவா் எம்.மோகன், மாவட்ட பொதுச் செயலாளா் பி ஆா் நடராஜன், மோட்டாா் சங்க மாவட்ட பொதுச் செயலாளா் கே.சுரேஷ், மோட்டாா் சங்க மாவட்ட பொருளாளா் எம்.மகேந்திரகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com