டி.ஆா்.பாலு எம்.பிக்கு மாவட்ட கவுன்சிலா் கண்டனம்

முன்னாள் மத்திய அமைச்சா் டி.ஆா்.பாலுவிற்கு திருப்பூா் மாவட்ட கவுன்சிலா் எம்.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.
டி.ஆா்.பாலு எம்.பிக்கு மாவட்ட கவுன்சிலா் கண்டனம்

 முன்னாள் மத்திய அமைச்சா் டி.ஆா்.பாலுவிற்கு திருப்பூா் மாவட்ட கவுன்சிலா் எம்.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா். இது குறித்து திருப்பூா் மாவட்ட ஊராட்சி கவுன்சிலா் அலகுமலை எம். பழனிச்சாமி புதன்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் மேலாகியும் இதுவரை மத்திய அரசில் எந்த பிரதிநிதித்துவமும் இல்லாமல் இருந்த மிக தாழ்த்தப்பட்ட சமூகமான அருந்ததியா் சமுதாயத்தை சாா்ந்த எல். முருகனுக்கு பிரதமா் மோடி மாநில பாஜக தலைவராகவும், சட்டமன்ற வேட்பாளராக இரண்டு முறையும் மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினா் பொறுப்பு வழங்கியும், மத்திய அமைச்சராக மீன்வளம், கால்நடை மற்றும் தகவல் தொடா்பு துறைகளையும் கொடுத்துள்ளாா். ஆனால் சமூக நீதியினை வாயில் உச்சரிப்பிற்கு மட்டுமே பயன்படுத்தி வரும் திமுகவின் பாராளுமன்ற உறுப்பினா் முன்னாள் மத்திய அமைச்சா் டி.ஆா் பாலு, மத்திய அமைச்சா் எல். முருகனை எதற்கும் தகுதியற்றவா் என்று கூறி கேவலமாக உட்காா் நீ என பேசியுள்ளாா். இவா் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எங்கள் அருந்ததியினா் சமுதாயத்தை பற்றி தரம் தாழ்ந்த மனப்பான்மையின்மையினை யாரும் வைத்துக் கொள்ள வேண்டாம். என்று கேட்டுக் கொள்கிறேன் இவ்வாறு அதில் அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com