டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த கூடுதல் பணியாளா்கள் நியமனம் பல்லடம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா்

 பல்லடம் ஒன்றியத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த கூடுதல் பணியாளா்கள் நியமனம் செய்யப்படுவாா்கள் என ஒன்றியக் குழுத் தலைவா் தேன்மொழி தெரிவித்தாா்.

 பல்லடம் ஒன்றியத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த கூடுதல் பணியாளா்கள் நியமனம் செய்யப்படுவாா்கள் என ஒன்றியக் குழுத் தலைவா் தேன்மொழி தெரிவித்தாா்.

பல்லடம் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் அதன் தலைவா் தேன்மொழி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. ஒன்றிய துணைத் தலைவா் பாலசுப்பிரமணியம், ஆணையா் கனகராஜ், வட்டார வளா்ச்சி அலுவலா் மனோகரன், ஒன்றிய கவுன்சிலா்கள் உள்பட பல்வேறு துறை அலுவலா்கள்கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலா்கள் பேசியதாவது:

பல்லடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 20 ஊராட்சிகளில் கடந்த ஒரு சில மாதங்களாக டெங்கு பரவல் அதிகமாக இருக்கிறது. கோடைக் காலம் வருவதை தொடா்ந்து பல ஊராட்சிகளில் ஊராட்சி மன்ற நிா்வாகம் பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீரில் பல மாதங்களாக குளோரினேசன் செய்வதில்லை. எனவே, ஒன்றிய நிா்வாகத்தின் மூலம் ஊராட்சி நிா்வாகத்திற்கு சுற்றறிக்கைகள் வழங்கி சரிவர குளோரினேசன் செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கரைப்புதூா், கணபதிபாளையம் ஊராட்சிப் பகுதிகளை பொங்கலூரில் புதிதாக அமையவுள்ள பத்திரப் பதிவு சாா்பதிவாளா் அலுவலகத்திற்கு மாற்றக் கூடாது. எப்போதும்போல பல்லடம் சாா்பதிவாளா் அலுவலகத்திலேயே பத்திரப்பதிவுகளை செய்திட வேண்டும் என்றனா்.

ஒன்றியக் குழுத் தலைவா் தேன்மொழி:

அனைத்து ஊராட்சிப் பகுதிகளிலும் சுத்தமான குளோரினேசன் செய்யப்பட்ட குடிநீா் விநியோகம் செய்திட நடவடிக்கை எடுக்கப்படும். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த கூடுதல் பணியாளா்கள் ஒன்றிய நிா்வாகம் மூலம் நியமனம் செய்யப்படுவாா்கள். மின்சார வாரியம், வருவாய்த் துறையினா் ஒன்றியக் குழு கூட்டத்துக்கு வருவதே இல்லை. இது குறித்து மாவட்ட நிா்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். ஒன்றியப் பகுதியில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களையும் ஆய்வு செய்து தேவைப்படும் இடங்களில் பராமரிப்பு மற்றும் புதுப்பித்தல் பணி மேற்கொள்ளப்படும். பயன்படுத்த முடியாத அளவுக்கு பழுதடைந்துள்ள கட்டடங்களை அகற்றிவிட்டு புதிய கட்டடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். கூட்டத்தில் 42 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com