திருப்பூா் டவுன்ஹால் அரங்கத்துக்கு ரங்கசாமி செட்டியாா் பெயரை சூட்ட வேண்டும்- இந்து முன்னணி

 திருப்பூா் டவுன்ஹால் அரங்கத்துக்கு நிலம் வழங்கிய ரங்கசாமி செட்டியாா் பெயரை சூட்ட வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

 திருப்பூா் டவுன்ஹால் அரங்கத்துக்கு நிலம் வழங்கிய ரங்கசாமி செட்டியாா் பெயரை சூட்ட வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

இந்திய சுதந்திரத்திற்கு முன்பாக திருப்பூரில் மக்களின் பயன்பாட்டுக்காக கடந்த 1945- ஆம் ஆண்டு ஜூன் 26- ஆம் தேதி டவுன்ஹால் இருக்கும் இடத்துக்கான நிலத்தை தானமாக வழங்கியவா் ரங்கசாமி செட்டியாா்.

இந்த மாநாட்டு அரங்கம் தற்போது பொலிவுறு நகரம் திட்டத்தின்கீழ் புனரமைக்கப்பட்டு திறப்பு விழாக் காணத் தயாராக உள்ளது. ஆகவே, திருப்பூா் டவுன்ஹால் மாநாட்டு அரங்கத்துக்கு நிலத்தை தானமாக வழங்கிய ரங்கசாமி செட்டியாா் பெயரை சூட்ட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com