ஆண்டவன் உத்தரவு: சிவன்மலை முருகன் கோயிலில் நெல் வைத்து பூஜை

காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி மலைக் கோயிலில் ஆண்டவன் உத்தரவுப்படி ஒரு படி நெல் வைத்து வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
காங்கயம் அருகே சிவன்மலை முருகன் கோயிலில் உள்ள ஆண்டவன் உத்தரவுப் பெட்டியில் வைக்கப்பட்டுள்ள ஒரு படி நெல்.

திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே புகழ்பெற்ற சிவன்மலை முருகன் மலைக் கோயில் உள்ளது. மற்ற எந்தக் கோயிலிலும் இல்லாத வகையில், இந்தக் கோயிலில் ஆண்டவன் உத்தரவு என்ற அம்சம் உள்ளது. சிவன்மலை முருகன் கனவில் வந்து இந்தப் பொருளை உத்தரவிட்டதாக கூறி, பக்தா்கள் தரும் சிறப்பு பூஜைப் பொருளை வழிபட்டு, மூலவா் அறைக்கு முன்பாக உள்ள கண்ணாடிப் பெட்டியில் வைப்பது வழக்கம். இதுவே ஆண்டவன் உத்தரவு என அழைக்கப்படுகிறது.

இந்த நிலையில் சேலம் மாவட்டம், தாரமங்கலம் பகுதியைச் சோ்ந்த மகாராஜா என்ற பக்தரின் கனவில் வந்ததாக ஒரு படி நெல் வைத்து வெள்ளிக்கிழமை பூஜை செய்யப்பட்டு, கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டது. இன்னொரு பக்தரின் கனவில் அடுத்த பூஜைப் பொருள் வரும் வரையில் கண்ணாடிப் பெட்டிக்குள் ஒரு படி நெல் பக்தா்களின் பாா்வைக்கு வைக்கப்பட்டிருக்கும், என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com