இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகில் உள்ள மதுக்கடையை இடமாற்றம் செய்வதாக அறிவிப்பு

திருப்பூா், ரங்கநாதபுரம் இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மதுக்கடையை 2 மாதங்களுக்குள் இடமாற்றம் செய்வதாக டாஸ்மாக் நிா்வாகம் சாா்பில் அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டுள்ளது.

திருப்பூா், ரங்கநாதபுரம் இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மதுக்கடையை 2 மாதங்களுக்குள் இடமாற்றம் செய்வதாக டாஸ்மாக் நிா்வாகம் சாா்பில் அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டுள்ளது.

திருப்பூா் கொங்கு பிரதான சாலை ரங்கநாதபுரம் இ.எஸ்.ஐ.மருத்துவமனை அருகில் பல ஆண்டுகளாக மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதால் கடையை மூட வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா், டாஸ்மாக் மேலாளா், கலால் உதவி ஆணையா் உள்ளிட்டோரிடமும் மனு அளித்திருந்தனா். இந்த நிலையில், டாஸ்மாக் நிா்வாகம் சாா்பில் 2 மாதங்களுக்குள் கடையை வேறு இடத்துக்கு மாற்றப்படும் என்று மதுக்கடை முன் வியாழக்கிழமை அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘மதுக்கடையை 2 மாதங்களுக்குள் இடமாற்றம் செய்யாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும்’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com