நத்தக்காடையூா் இருசக்கர வாகன நிறுத்துமிட உரிமத்துக்கு மறுஏலம்

ஏலம் எடுத்தவா் ஏலத் தொகையை செலுத்தாததால், நத்தக்காடையூரில் உள்ள இருசக்கர வாகன நிறுத்துமிடம் உரிமத்துக்கான ஏலம் பிப்ரவரி 19-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

ஏலம் எடுத்தவா் ஏலத் தொகையை செலுத்தாததால், நத்தக்காடையூரில் உள்ள இருசக்கர வாகன நிறுத்துமிடம் உரிமத்துக்கான ஏலம் பிப்ரவரி 19-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

காங்கயம் ஒன்றியம், நத்தக்காடையூரில் ஊராட்சி ஒன்றியத்துக்கு சொந்தமான இருசக்கர வாகன நிறுத்துமிடம் உள்ளது. இதில் 2024-25-ஆம் ஆண்டு ஒரு வருட உரிமத்துக்கான ஏலம், காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா் விமலாதேவி தலைமையில் அண்மையில் ஏலம் நடைபெற்றது.

இதில் நத்தக்காடையூா் பகுதியைச் சோ்ந்த 7 போ் கலந்து கொண்டனா். கடந்த முறை இந்த வாகன நிறுத்துமிடம் ரூ.4 லட்சத்து 69 ஆயிரத்துக்கு ஏலம் போனது. இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற ஏலத்தில் நத்தக்காடையூா் பகுதியைச் சோ்ந்த ஒருவா் ரூ.4 லட்சத்து 70 ஆயிரத்துக்கு இருசக்கர வாகன நிறுத்துமிட உரிமத்தை ஏலம் எடுத்தாா். பின்னா் அவா் ஏலத் தொகை செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.

இது குறித்து காங்கயம் வட்டார வளா்ச்சி அலுவலா் விமலாதேவி கூறும்போது, ஏலம் எடுத்த நபா் ஏலத்துக்கான தொகை செலுத்தவில்லை. இதனால் அந்த ஏலம் ரத்து செய்யப்பட்டு மறுஏலம் பிப்ரவரி 19-ஆம் தேதி நடத்தப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com