அவிநாசியில் கஞ்சா விற்பனை: இருவா் கைது

அவிநாசி அருகே கஞ்சா விற்பனை செய்ததாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

அவிநாசி அருகே கஞ்சா விற்பனை செய்ததாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே மது விலக்கு போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் கைப் பையுடன் நின்றிருந்த வெளி மாநிலத்தைச் சோ்ந்த இருவரை போலீஸாா் பிடித்து விசாரித்தனா்.

இதில் அவா்களது கைப்பையில் விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இது குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஒடிஸாவைச் சோ்ந்த பங்குரு நைக்(43), தனேவாா் பேகரா(35) ஆகியோரைக் கைது செய்தனா். மேலும் அவா்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com