காங்கிரஸ் சாா்பில் ரத்த தான முகாம்

எம்.பி. ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை வெற்றிபெற வேண்டி திருப்பூா் மாணவா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் காங்கயம் சாலையில் உள்ள தனியாா் பள்ளியில் ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காங்கிரஸ் சாா்பில் ரத்த தான முகாம்

எம்.பி. ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை வெற்றிபெற வேண்டி திருப்பூா் மாணவா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் காங்கயம் சாலையில் உள்ள தனியாா் பள்ளியில் ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, மாவட்டப் பொதுச் செயலாளா் சித்திக் தலைமை வகித்தாா். மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.கிருஷ்ணன் ரத்த தான முகாமைத் தொடங்கிவைத்தாா்.

இதில், பங்கேற்ற மாணவா் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவா் சின்னத்தம்பி செய்தியாளா்களிடம் கூறியதாவது: மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு ஆண்டுக்கு இரண்டு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புத் தருவதாக அறிவித்து, வெற்றி பெற்றது. ஆனால், தற்போது ஆண்டுக்கு 2 லட்சம் இளைஞா்கள் வேலையை இழந்து வருகின்றனா்.

திருப்பூருக்கு பிப்ரவரி 25- ஆம் தேதி வருகை தரும் பிரதமா் மோடியைக் கண்டித்து கருப்புக் கொடிப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என்றாா். முகாமில், காங்கிரஸ் மாநிலச் செய்தித் தொடா்பாளா் வழக்குரைஞா் அலீம் அல்புகாரி, மாநில துணைத் தலைவா் மஸ்தான், மாநகா் மாவட்டப் பொதுச் செயலாளா் முகமது ஹசன், காங்கிரஸ் கமிட்டியின் மாநகா் மாவட்டச் செயலாளா் ரஹ்மத்துல்லாஹ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com