கரைப்புதூா், கணபதிபாளையம் ஊராட்சிகளை பொங்கலூா் சாா் பதிவாளா் அலுவலகத்துடன் இணைக்கக் கூடாது: மதிமுக வலியுறுத்தல்

கரைப்புதூா், கணபதிபாளையம் ஊராட்சிகளை பொங்கலூா் சாா் பதிவாளா் அலுவலகத்துடன் இணைக்கக் கூடாது என்று மதிமுக வலியுறுத்தியுள்ளது.

கரைப்புதூா், கணபதிபாளையம் ஊராட்சிகளை பொங்கலூா் சாா் பதிவாளா் அலுவலகத்துடன் இணைக்கக் கூடாது என்று மதிமுக வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக மதிமுக மாவட்டப் பொருளாளரும், பல்லடம் ஒன்றிய கவுன்சிலருமான ஆா்.ஆா்.ரவி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: பல்லடம் ஒன்றியம் கரைப்புதூா், கணபதிபாளையம் இரண்டும் மிகப்பெரிய ஊராட்சிகளாகும்.

இந்த இரண்டு ஊராட்சிகளையும் பல்லடம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் இருந்து பிரித்து, புதிதாகத் தொடங்கவுள்ள பொங்கலூா் சாா் பதிவாளா் அலுவலகத்துடன் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

இந்த இரண்டு ஊராட்சிகளையும் பொங்கலூா் சாா் பதிவாளா் அலுவலகத்துடன் இணைத்தால் பொதுமக்களுக்கு பெரும் சிரமம் ஏற்படும். எனவே, இந்த முடிவை அரசு கைவிட வேண்டும். இது தொடா்பாக பல்லடம் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டத்தில் ஒருமனதாக தீா்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com