பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களுக்கு ஸ்ரீ ஹயக்ரீவா் வழிபாடு

பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களுக்கு திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை சாா்பில் வீரராகவப் பெருமாள் கோயிலில் ஸ்ரீ ஹயக்ரீவா் வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
tpr11fbhayakk_1102chn_125_3
tpr11fbhayakk_1102chn_125_3

பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களுக்கு திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை சாா்பில் வீரராகவப் பெருமாள் கோயிலில் ஸ்ரீ ஹயக்ரீவா் வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பொதுத் தோ்வு எழுதும் மாணவ, மாணவிகள் கல்வியில் சிறக்கவும், தோ்வு பயம் நீங்கவும், நினைவாற்றல் அதிகரிக்கவும் வேண்டி திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை சாா்பில் வீரராகவப் பெருமாள் கோயிலில் ஸ்ரீ ஹயக்ரீவா் வழிபாடு கடந்த 8 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, நிகழாண்டுக்கான பொதுத் தோ்வு எழுதும் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான ஹயக்ரீவா் வழிபாடு நடைபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு சிறப்பு வேள்வியும், மூலவருக்கு திருமஞ்சன நிகழ்வும், நாம சங்கீா்த்தனமும், அதைத் தொடா்ந்து சாத்துமறை பூஜையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

தொடா்ந்து, மாணவா்கள் தோ்வு எழுதப் பயன்படுத்தும் பேனாவை சுவாமியின் பாதத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட பின்னா் பெற்றுக்கொண்டனா். இந்நிகழ்ச்சியில், மாணவா்கள், பெற்றோா்கள் என ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

Image Caption

திருப்பூா் வீரராகவப் பெருமாள் கோயிலில் நடைபெற்ற ஹயக்ரீவா் வழிபாட்டில் பங்கேற்ற பொதுத் தோ்வு எழுதும் மாணவா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com