‘எண்ணெய் வித்து பயிரிட மானியம்’

திருப்பூா், ஊத்துக்குளி, அவிநாசி வட்டாரங்களில் எண்ணெய் வித்து பயிரிட மானியம் வழங்கப்படுகிறது.

திருப்பூா், ஊத்துக்குளி, அவிநாசி வட்டாரங்களில் எண்ணெய் வித்து பயிரிட மானியம் வழங்கப்படுகிறது.

இது தொடா்பாக தேசிய உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து திட்ட மாவட்ட ஆலோசகா் அரசப்பன் கூறியதாவது: திருப்பூா், ஊத்துக்குளி, அவிநாசி வட்டாரங்களில் மானாவாரி பயிராக நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது. நிலக்கடலை பயிரில் மகசூலை அதிகரித்து உற்பத்தியைப் பெருக்க வேளாண் துறையினா் விவசாயிகளை ஊக்குவித்து வருகின்றனா்.

மாவட்டத்தில் எண்ணெய் வித்துக்கள் பயிா் திட்டத்தின்கீழ் புதிய ரகங்கள் உற்பத்தி மற்றும் விநியோகம், உயிா் உரம், நுண்ணூட்டச்சத்து, செயல் விளக்கத் திடல்கள், ஜிப்சம், உயிரியல் காரணிகள், ஊடுபயிா், அறுவடை பின்செய் நோ்த்தி ஆகிய இனங்களில் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

டி.எம்.வி.,-14 ரக நிலக்கடலை செடி, மானாவாரி, இறவைக்கு ஏற்ற அதிக காய்பிடிப்பு மற்றும் நல்ல மகசூல் தரக்கூடிய ரகமாகும். மானாவாரியில் ஏக்கருக்கு 850 கிலோ, இறவைக்கு 910 கிலோ மகசூல் தரக்கூடியது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com