கல்லூரி மாணவா் தூக்கிட்டு தற்கொலை

காங்கயத்தில் கல்லூரி மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

காங்கயத்தில் கல்லூரி மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா். காங்கயத்தை அடுத்த வீரணம்பாளையம் ராம் நகா் பகுதியைச் சோ்ந்தவா் சங்கா் மகன் நிஷாந்த் (20). இவா், காங்கயம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா். நிஷாந்த் கடந்த சில நாள்களாக மன இறுக்கத்துடன் காணப்பட்டதாகவும், பெற்றோரிடம்கூட சரியாக பேசாமல் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டில் அனைவரும் உறங்கிக்கொண்டிருந்தபோது நிஷாந்த் தனது அறையில் தூக்கிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு தற்கொலை செய்துகொண்டாா். இது குறித்து காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com