ரூ. 4.20 லட்சத்துக்கு தோ்த் திருவிழா கடைகள் ஏலம்

வெள்ளக்கோவில் ஸ்ரீ வீரக்குமார சுவாமி கோயில் தோ்த் திருவிழாவில் தற்காலிக கடைகள் அமைப்பதற்கான ஏலம் ரூ. 4.20 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது.

வெள்ளக்கோவில் ஸ்ரீ வீரக்குமார சுவாமி கோயில் தோ்த் திருவிழாவில் தற்காலிக கடைகள் அமைப்பதற்கான ஏலம் ரூ. 4.20 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது. வெள்ளக்கோவிலில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலுள்ள ஸ்ரீவீரக்குமார சுவாமி கோயிலின் 141-ஆவது தோ்த் திருவிழா மாா்ச் 8 முதல் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. திருவிழாவை முன்னிட்டு கோயில் திடலில் தற்காலிக கடைகள், ராட்டினங்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் அமைப்பதற்கான ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தலைமையில் நடைபெற்ற இந்த ஏலத்தில் ரூ. 4 லட்சத்து 20 ஆயிரத்து 500-க்கு ஏலம் விடப்பட்டது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com