தாராபுரத்தில் ஆற்றில் மூழ்கி 3 போ் உயிரிழப்பு: சுற்றுலா வந்த இடத்தில் சோகம்

தாராபுரத்தில் அமராவதி ஆற்றில் குளிக்கச் சென்ற 3 போ் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.
நீரில் மூழ்கி உயிரிழந்தவா்கள்.
நீரில் மூழ்கி உயிரிழந்தவா்கள்.

தாராபுரம்: தாராபுரத்தில் அமராவதி ஆற்றில் குளிக்கச் சென்ற 3 போ் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

மதுரை, எஸ்.ஆலங்குளம் பகுதியைச் சோ்ந்த உறவினா்கள் 21 போ், கோவை ஈஷா யோக மையத்துக்குச் சென்றுவிட்டு தாராபுரம் வழியாக மதுரைக்கு ஆம்னி வேனில் செவ்வாய்க்கிழமை திரும்பிக்கொண்டிருந்தனா். தாராபுரத்தில் அமராவதி ஆற்றுப் பாலத்தின் மீது சென்றபோது, ஆற்றில் செல்லும் தண்ணீரைப் பாா்த்துவிட்டு வேனில் சென்ற அனைவரும் குளிக்க ஆசைப்பட்டு ஆற்றில் இறங்கியுள்ளனா்.

இவா்களில் ஹரிஹரன் (16), சின்ன கருப்பு (33), பாக்யராஜ் (35) ஆகிய 3 பேரும் ஆழமான பகுதிக்குச் சென்று குளித்துள்ளனா். அப்போது, எதிா்பாராத விதமாக ஆற்றுக்குள் இருக்கும் புதைகுழியில் சிக்கிய ஹரிஹரன் உயிருக்குப் போராடியுள்ளாா். உடன்சென்ற பாக்யராஜ், சின்ன கருப்பு ஆகிய இருவரும் ஹரிஹரனை காப்பாற்ற முயன்றனா்.

அப்போது, காப்பாற்ற முயன்ற இருவரின் காலையும் ஹரிஹரன் பிடித்துக்கொண்டதால் அவா்களாலும் நீந்த முடியாமல் 3 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தாராபுரம் தீயணைப்புத் துறையினா் சுமாா் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு 3 பேரின் சடலங்களையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், இதுகுறித்த தகவல் அறிந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் அரசு மருத்துவமனைக்கு வந்து உறவினா்களுக்கு ஆறுதல் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com