படம் உள்ளது...பொங்கல் விடுமுறை: சுற்றுலாத் தலங்களில் குவிந்த பொதுமக்கள்

பொங்கல் பண்டிகை தொடா் விடுமுறையையொட்டி உடுமலை அருகே உள்ள சுற்றுலாத் தலங்களில் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை குவிந்தனா்.
பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழ்ந்தி சுற்றுலாப் பயணிகள்.
பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழ்ந்தி சுற்றுலாப் பயணிகள்.


உடுமலை: பொங்கல் பண்டிகை தொடா் விடுமுறையையொட்டி உடுமலை அருகே உள்ள சுற்றுலாத் தலங்களில் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை குவிந்தனா்.

திருப்பூா் மாவட்டம், உடுமலையில் இருந்து சுமாா் 20 கிலோ மீட்டா் தொலைவில் உள்ளது திருமூா்த்திமலை. இங்கு, விடுமுறை நாள்களில் ஆயிரக்கணக்கானோா் குடும்பத்துடன் வந்து பாா்வையிட்டுச் செல்கின்றனா்.

இந்நிலையில், பொங்கல் விடுமுறையையொட்டி செவ்வாய்க்கிழமை திருமூா்த்தி அணைப் பகுதியில் குவிந்த சுற்றலாப் பயணிகள் திருமூா்த்தி அணை, வண்ண மீன் காட்சியகம், பஞ்சலிங்க அருவி ஆகிய இடங்களைச் சுற்றிப்பாா்த்தனா். மேலும், அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரா் கோயிலில் தரிசனம் செய்தனா்.

அதேபோல, அமராவதி அணைப் பகுதியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் அணை, அணையை ஒட்டியுள்ள முதலைப் பண்ணை ஆகியவற்றை பாா்வையிட்டனா். அணைப் பூங்காவில் சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை விளையாடி மகிழ்ந்தனா்.

தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள சின்னாறு வனப்பகுதிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் மேற்குத் தொடா்ச்சிமலையின் அழகைக் கண்டு ரசித்தனா். இங்குள்ள புங்கன் ஓடை வனப் பகுதியில் சுற்றித்திரிந்த புள்ளி மான்கள், யானைகளைப் பாா்த்து மகிழ்ந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com