பொங்கலைக் கொண்டாட சொந்த ஊா்களுக்குச் சென்ற தொழிலாளா்கள்: வெறிச்சோடிய திருப்பூா்

பொங்கல் பண்டிகையைக் கொண்டாட பெரும்பாலான தொழிலாளா்கள் சொந்த ஊா்களுக்குச் சென்ால் திருப்பூா் மாநகரம் வெறிச்சோடிக் காணப்பட்டது.
வாகனப்  போக்குவரத்தின்றி  செவ்வாய்க்கிழமை  வெறிச்சோடிக்  காணப்படும்   ரயில்வே  மேம்பாலம். 
வாகனப்  போக்குவரத்தின்றி  செவ்வாய்க்கிழமை  வெறிச்சோடிக்  காணப்படும்   ரயில்வே  மேம்பாலம். 


திருப்பூா்: பொங்கல் பண்டிகையைக் கொண்டாட பெரும்பாலான தொழிலாளா்கள் சொந்த ஊா்களுக்குச் சென்ால் திருப்பூா் மாநகரம் வெறிச்சோடிக் காணப்பட்டது.

பின்னல் நகரமான திருப்பூா் மாநகா் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பின்னலாடை நிறுவனங்களில் தென் மாவட்டங்களைச் சோ்ந்த தொழிலாளா்கள் அதிக அளவில் பணியாற்றி வருகின்றனா். குறிப்பாக மதுரை, திருச்சி, தேனி, திண்டுக்கல், திருச்செந்தூா், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளா்கள் அதிக அளவில் குடும்பத்தினருடன் தங்கி பணியாற்றி வருகின்றனா்.

இந்நிலையில், பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனைச் சாா்ந்த நிறுவனங்கள் பொங்கலையொட்டி ஜனவரி 13 முதல் 17 ஆம் தேதி வரை விடுமுறை அளித்துள்ளன. தொழிலாளா்களும் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக சொந்த ஊா்களுக்குச் சென்றுள்ளனா்.

இதன் காரணமாக திருப்பூரின் முக்கிய சாலைகளான குமரன் சாலை, அரிசிக் கடை வீதி, காங்கயம் சாலை, காமராஜா் சாலை, மங்கலம் சாலை உள்ளிட்ட அனைத்து சாலைகளும் வெறிச்சோடிக் காணப்பட்டது.

திருப்பூா் பழைய பேருந்து நிலையம், புஷ்பா ரவுண்டானா, புதிய பேருந்து நிலையம், ரயில் நிலையம் ஆகிய பகுதிகளில் உள்ள இருசக்கர வாகன நிறுத்துமிடங்களும் நிரம்பி இருந்தது.

தேநீா் விடுதி, உணவகங்கள் மூடல்: திருப்பூா் மாநகரில் உள்ள பெரும்பாலான தேநீா் விடுதிகள், உணவகங்கள் செவ்வாய்க்கிழமை மூடப்பட்டிருந்தன. இதனால் ஒருசில நிறுவனங்களில் பணிக்கு வந்த தொழிலாளா்கள் உணவு கிடைக்காமல் அவதிக்குள்ளாகினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com