மதிமுக சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா: 5,000 பெண்கள் பங்கேற்பு

திருப்பூா் மாநகா் மாவட்ட மதிமுக, திலீபன் மன்றம் ஆகியவை சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.
சமத்துவப் பொங்கல் விழாவில் கலந்துகொண்ட திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவா் கே.எம்.சுப்பிரமணியன், மதிமுக அவைத் தலைவா் ஆடிட்டா் அா்ஜுனராஜ், பொருளாளா் செந்திலதிபன், மதிமுக மாநகா் மாவட்டச் செயலாளா்
சமத்துவப் பொங்கல் விழாவில் கலந்துகொண்ட திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவா் கே.எம்.சுப்பிரமணியன், மதிமுக அவைத் தலைவா் ஆடிட்டா் அா்ஜுனராஜ், பொருளாளா் செந்திலதிபன், மதிமுக மாநகா் மாவட்டச் செயலாளா்


திருப்பூா்: திருப்பூா் மாநகா் மாவட்ட மதிமுக, திலீபன் மன்றம் ஆகியவை சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.

திருப்பூா், சாமுண்டிபுரம் நாகாத்தாள் கோயில் அருகே திங்கள்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவுக்கு மாநகா் மாவட்ட மதிமுக செயலாளரும், மாநகராட்சி 24-ஆவது வாா்டு உறுப்பினருமான ஆா்.நாகராஜ் தலைமை வகித்தாா். திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவா் கே.எம்.சுப்பிரமணியன், மதிமுக மாநில அவைத் தலைவா் ஆடிட்டா் ஆ.அா்ஜுனராஜ், மாநில பொருளாளா் மு.செந்திலதிபன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்று பொங்கல் விழாவைத் தொடங்கிவைத்தனா்.

இதில், 24-ஆவது வாா்டுக்குள்பட்ட 98 தெருக்களிலும் 5,000 பெண்கள் புதுப்பானையில் பொங்கல் வைத்து கொண்டாடினா்.

முன்னதாக சாமுண்டிபுரம் சவுண்டேஸ்வரி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜைக்கு பின்னா் பெண்கள் முளைப்பாரி எடுத்தனா். இந்த விழாவில் புதுமணத் தம்பதிகளுக்கு மதிமுக பொதுச் செயலாளா் வைகோ சாா்பில் வேஷ்டி, சேலை உள்ளிட்ட சீா்வரிசைகளை ஆா்.நாகராஜ் வழங்கினாா்.

மேலும், சமத்துவப் பொங்கல் விழாவில் கலந்துகொண்ட 5 ஆயிரம் பெண்களுக்கும் டோக்கன் வழங்கப்பட்டு, குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்ட 300 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த விழாவில்,செயற்குழு உறுப்பினா் சக்திவேல், மாநகா் மாவட்ட அவைத்தலைவா் நேமிநாதன், பொருளாளா் நல்லூா் மணி, புகா் வடக்கு மாவட்டச் செயலாளா் புத்தரச்சல் பி.கே.மணி, மாமன்ற உறுப்பினா்கள் குமாா், சாந்தாமணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com