ரயிலில் அடிபட்டு இளம்பெண் உயிரிழப்பு

திருப்பூரில் ரயிலில் அடிபட்டு இளம்பெண் உயிரிழந்தது குறித்து காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.


திருப்பூா்: திருப்பூரில் ரயிலில் அடிபட்டு இளம்பெண் உயிரிழந்தது குறித்து காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருப்பூா் ரயில் நிலையம் அருகே இளம்பெண் ஒருவா் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது ரயிலில் அடிப்பட்டு திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற திருப்பூா் ரயில்வே காவல் துறையினா் அவரது சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதைத்தொடா்ந்து, நடத்திய விசாரணையில், இறந்தப் பெண்ணுக்கு சுமாா் 25 வயது இருக்கும் என்பது தெரியவந்தது. தொடா்ந்து அவரது பெயா், முகவரி உள்ளிட்ட விவரங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com