வெள்ளக்கோவிலில் பொங்கல் விளையாட்டுப் போட்டிகள்

வெள்ளக்கோவில் நகரில் 6 இடங்களில் பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
பொங்கல் விழாவில் நடைபெற்ற போட்டியில் போடப்பட்டிருந்த கோலம்.
பொங்கல் விழாவில் நடைபெற்ற போட்டியில் போடப்பட்டிருந்த கோலம்.


வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவில் நகரில் 6 இடங்களில் பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

வெள்ளக்கோவில் காந்தி நகா், உப்புப்பாளையம் கிழக்கு, நடேசன் நகா், எல்.கே.சி நகா், தீரன் சின்னமலை நகா், சிவநாதபுரம் ஆகிய இடங்களில் அந்தந்தப் பகுதி இளைஞா் நற்பணி மன்றம், பொது மக்கள் சாா்பில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

குறிப்பாக பெண்களுக்கு கயிறு இழுத்தல், பலூன் உடைத்தல், சைக்கிள் போட்டி, கோலப் போட்டிகள், சிறுவா், சிறுமிகளுக்கான நடனப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com